விநாயகர் சதூர்த்தியில் அஜீத்தின் அறிமுகப்பாடல்?
அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தில் அஜீத்தின் அறிமுகப்பாடலை ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத் கம்போஸ் செய்து முடித்துவிட்டதாக வந்த செய்தியை பார்த்தோம். தற்போது இந்த பாடல் குறித்த மற்றொரு தகவல் வெளிவந்துள்ளது.
இந்த பாடல் கொல்கத்தாவில் விநாயகர் சதூர்த்தி திருவிழா நடைபெறும் நாளில் அஜீத் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாடுவதாக படமாக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே இந்த படம் பாட்சாவின் ரீமேக் என்ற வதந்தி வந்து கொண்டிருக்கின்றது. பாட்ஷா படத்தில் ரஜினிக்கு, ஆயுத பூஜை திருவிழாவின் போது வரும் அறிமுகப்பாடல் போல 'தல 56' படத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் போது அறிமுகப்பாடல் வருவதால் இந்த வதந்தி மேலும் வலுவாகி வருகிறது.
மேலும் அஜீத் ஏற்கனவே நடித்த அமர்க்களம் படத்தில் 'காலம் கலிகாலம் ஆகி போச்சுடா' என்ற பாடல் மற்றும் வான்மதி படத்தில் இடம்பெற்ற 'பிள்ளையார்ப்பட்டி ஹீரோ நீதான்' என்ற பாடல் ஆகிய இரண்டு பாடல்களும் விநாயகரை பற்றிய பாடல் என்பதும் இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றை போலவே விநாயகர் பாடல் அமைந்த 'தல 56' படமும் சூப்பர் ஹிட் ஆகும் என்று அஜீத் ரசிகர்களின் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
அஜீத், ஸ்ருதிஹாசன், லக்ஷ்மி மேனன், அஸ்வின் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment