சென்னையில் உள்ள பல திரையரங்குகளில் ஏதாவது ஸ்பெஷல் தினம் வந்துவிட்டால் முன்னணி நடிகர்களின் படங்கள் திரையிடப்படும்.
அப்படி இந்த நியூஇயர் ஸ்பெஷலில் பல திரையரங்குகளில் ஸ்பெஷலாக படங்கள் திரையிடப்படும் என ரசிகர்களும் ஆவலாக வெயிட்டிங்.
ஆனால் பிரபல திரையரங்கமான ரோஹினி திரையரங்கில் நியூஇயர் ஸ்பெஷலாக எந்த படங்களும் திரையிடப்படவில்லையாம். இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் ஏற்படுத்த விரும்பாததால் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பதாக ரோஹினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
No comments:
Post a Comment