ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தளபதி விஜய்யை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கிவருகிறார். ஸ்டிரைக் நடந்துவரும் நிலையிலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்த நிலையில் அது இன்றோடு முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் இன்று கிருத்திகையை முன்னிட்டு சென்னையில் உள்ள கந்தகோட்டம் முருகன் கோவிலுக்கு வந்தார்.
அப்போது அங்கிருந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டு செல்பி எடுக்க முற்பட்டனர். ஆனால் அவர் யாரையும் அனுமதிக்கவில்லை.
அங்கிருந்த அஜித் ரசிகர்கள் சிலர் "அஜித்தை வைத்து படம் எடுங்கள்" என தொடர்ந்து கத்தினர். அதற்கு முருகதாஸ் எந்த பதிலையும் கூறாமல் கையை மட்டும் ரசிகர்களை பார்த்து அசைத்து விட்டு கிளம்பி சென்றுவிட்டார்.
No comments:
Post a Comment