தமிழ் சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு துறையிலும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. முதன்முதலாக அப்படி மக்களுக்கு தெரியவந்தது நடிகர் சங்க பிரச்சனையில் தான். சரத்குமார்தலைவராக இருந்து நிறைய ஏமாற்றிவிட்டார் என்று கூறி விஷால் மற்றும் அவரது குழுவினர் போட்டி போட்டு பின் வெற்றியும் பெற்றனர்.
நடிகர் சங்கம் மட்டும் இல்லாமல் விஷால் தயாரிப்பாளர் சங்கத்திலும் போட்டிபோட்டு அதிலும் வெற்றிபெற்றார். தற்போது அவரது முன்னிலையில் தமிழ் சினிமா முழு ஸ்ட்ரைக் நடத்தி வருகிறது.
அண்மையில் தயாரிப்பாளர் குழுவும் நடிகர் சங்க குழுவும் சந்தித்துள்ளனர். அப்போது பேச்சு வார்த்தையில் Fefsi தொழிலாளிகளுக்கு தங்களது படத்தில் பணிபுரிந்தால் எவ்வளவு ஆகுமோ அதை நாங்களே எங்களது சம்பளத்தில் இருந்து கொடுக்கிறோம் என்று நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோர் கூறியுள்ளனர்.
இவர்களை போல மற்ற நடிகர்களும் ஒப்புக் கொள்வார்களா அஜித்-விஜய் அவர்களின் முடிவு என்ன என்பது இன்னும் தெரியவில்லை.
No comments:
Post a Comment