தமிழ் சினிமாவில் இரண்டு நடிகர்களின் போட்டி என்பது காலம் காலமாக நடந்து வருகின்றது. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் அப்படியொரு போட்டி என்றால் விஜய், அஜித்திற்கு தான்.
இவர்களின் போட்டி என்பது போஸ்ட்டர், பேனர் தாண்டி சமூக வலைத்தளங்களில் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது, அதை விட ரூ 100 கோடி, பாக்ஸ் ஆபிஸ் வசூல் என இதில் தான் இவர்கள் போட்டி தீவிரமாக உள்ளது.
தற்போது இந்த 10 வருடத்தில் இவர்களில் யார் அதிக ஹிட், தோல்வி படங்களை கொடுத்துள்ளார்கள் என்று பார்ப்போம்
விஜய்
விஜய் கடந்த பத்து வருடத்தில் பார்க்காத வெற்றி, தோல்வியே இல்லை, அந்த அளவிற்கு பல சாதனைகளையும், சோதனைகளையும் கடந்து வந்துவிட்டார், அதில் 2007ம் ஆண்டு போக்கிரி படத்தின் மூலம் பிரமாண்ட வெற்றியை விஜய் அடைந்தார்.
அதை தொடர்ந்து தான் விஜய்யின் உச்சக்கட்ட சோதனைக்காலம் தொடங்கியது, அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என தொடர்ந்து 5 படங்கள் தோல்வியை கொடுத்தார்.
விஜய் திரைப்பயணம் அவ்வளவு தான் என்று நினைத்திருந்த நேரத்தில் காவலன், வேலாயுதம், நண்பன் என மீண்டு எழுந்தார், அதை தொடர்ந்து துப்பாக்கியில் ரஜினியையே தொடும் அளவிற்கு பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தார்.
ஆனால், உடனே அடுத்தடுத்து தலைவா, ஜில்லாவில் வீழ்ந்து பின் கத்தி மூலம் எழுந்து, மீண்டும் புலியில் தன் திரைப்பயணத்தில் மிகப்பெரும் தோல்வியை சந்தித்தார், உடனே சுதாரித்துக்கொண்டு அடுத்து ’தெறி’க்கவிட்ட இவர் பைரவாவில் மீண்டும் ஒரு சறுக்கலை சந்தித்தார், இவை அனைத்திற்கும் ஒட்டு மொத்தமாக மெர்சலில் ரஜினியின் சாதனையையே முறியடிக்கும் அளவிற்கு பிரமாண்ட ஹிட்டை கொடுத்து உச்சத்தை நோக்கி உயர்ந்தார்.
- போக்கிரி- மெகா ஹிட்
- குருவி- தோல்வி
- அழகிய தமிழ் மகன் - தோல்வி
- வில்லு- தோல்வி
- வேட்டைக்காரன் - தோல்வி
- சுறா- தோல்வி
- காவலன் - ஆவரேஜ்
- வேலாயுதம்- ஹிட்
- நண்பன் - சூப்பர் ஹிட்
- துப்பாக்கி- மெகா ஹிட்
- தலைவா- தோல்வி
- ஜில்லா- தோல்வி
- கத்தி- சூப்பர் ஹிட்
- புலி- பெரும் தோல்வி
- தெறி- சூப்பர் ஹிட்
- பைரவா- தோல்வி
- மெர்சல்- மெகா ஹிட்
அஜித்
அஜித்தை பொறுத்தவரையில் எப்போதும் மிகவும் நிதானமாக தான் முடிவெடுப்பார், வருடத்திற்கு ஒரு படம் என்ற ரீதியில் தான் அஜித் 2007ம் ஆண்டிலிருந்து ஒரு முடிவெடுத்தார்.
அந்த வகையில் அஜித் ஆழ்வார், கிரீடம் என தொடர் தோல்விகளால் துவண்டு இருந்த நேரத்தில் தான் 2007ம் ஆண்டு இறுதியில் வந்த பில்லா அவரின் திரைப்பயணத்தையே திருப்பி போட்டது.
இந்த படத்திற்கு பிறகு தான் அஜித்திற்கு என பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உருவாகியது, அஜித் இனி வேற லெவல் என்று நினைத்தால் மீண்டும் ஏகன், அசல் என மீண்டும் சறுக்கினார்.
அதை தொடர்ந்து ரஜினியின் எந்திரனுக்கு சவால் விடும் ஓப்பனிங் மங்காத்தா மூலம் கொடுத்து தன் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார், அதை தொடர்ந்து பில்லா-2 மட்டுமே தோல்வி, பிறகு வந்த ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம் என தொடர் வெற்றிகளை குவித்து வந்த அஜித்திற்கு விவேகம் பெரும் தோல்வியை கொடுத்துள்ளது.
- ஆழ்வார்- பெரும் தோல்வி
- கிரீடம்- தோல்வி
- பில்லா- மெகா ஹிட்
- ஏகன் - தோல்வி
- அசல்- தோல்வி
- மங்காத்தா- மெகா ஹிட்
- பில்லா2- தோல்வி
- ஆரம்பம்- ஹிட்
- வீரம்- ஹிட்
- என்னைஅறிந்தால்- ஹிட்
- வேதாளம்- மெகா ஹிட்
- விவேகம்- பெரும் தோல்வி
விஜய் கடந்த 10 வருடத்தில் 17 படங்கள் நடித்து 9 தோல்வி படங்களை கொடுத்துள்ளார், அஜித் 10 வருடத்தில் 12 படங்கள் நடித்து 6 தோல்வி படங்களை கொடுத்துள்ளார், வெற்றி விகிதத்தில் அஜித் முன்னால் இருக்க, வசூல் விகிதத்தில் விஜய் தான் முன்னால் இருக்கின்றார்.
No comments:
Post a Comment