தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரத்தங்களில் ஒருவர் நடிகர் அஜித், பொதுவாகவே எந்தவொரு விருது, நட்சத்திர விழாக்களுக்கும் தலைகாட்ட ஆசைப்படாத ஒரு நடிகர்.
அதை தன் கொள்கையாக வைத்திருப்பவர் அஜித். ஏற்கனவே நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட் விழாவையும் புறக்கணித்தார். அடுத்த மாதம் 6ம் தேதி மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது மலேசியா நட்சத்திர கலைவிழா. இந்நிகழ்ச்சிக்கு தற்போதே 5 மற்றும் 6ம் தேதி எந்தவொரு படப்பிடிப்பும் இருக்கக்கூடாது என்று உத்தரவுபோடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஜினி முதல் விமல் வரை அணைத்து நடிகர்களும் கலந்து கொள்ளவிருக்கும் மலேஷியா நட்சத்திர விழாவையும் கண்டுகொள்ளவில்லையாம் அஜித். இந்த நிகழ்ச்சிக்கு எப்படியாவது அஜித் வரவேண்டும் என்ற நடிகர் சங்கம் தரப்பினர் ஆசைப்பட்டாலும் வருவதற்கான வாக்குறுதி இன்னும் கிடைக்கவில்லையாம்,
ஆகமொத்தத்தில் இம்முறையும் அஜித் நடிகர் சங்கம் நடத்தும் விழாவை புறக்கணிக்கிறார்.

No comments:
Post a Comment