அப்படியாக சர்ச்சையில் மாட்டிக்கொண்டு வெளியான படங்கள் பற்றி பார்க்கலாம்
.காற்று வெளியிடை
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி நடித்து ஏப்ரல் மாதம் வெளியானது. மணிரத்னம் படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் திருப்தி கொடுக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
படத்தின் தலைப்புக்கு சற்று வித்தியாசமான அர்த்தம் என்பதால் சில விமர்சனங்களை சந்தித்தது. கதையும் ரசிகர்களிடம் இடம் பிடிக்கவில்லை.
மெர்சல்
தெறி படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருந்தார். விலங்குகள் நல வாரியத்தின் அனுமதி மறுப்பு, டைட்டில் பிரச்சனை என ஒரு வெளியாக வெளியாகிவிட்டது.
பின் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா என சில காட்சிகள் பெரும் சர்ச்சையை சந்தித்தது. படத்திலிருந்தும் நீக்கப் பட்டது. ஆனாலும் வசூல் நல்ல நிலையில் தான் இருந்தது.
சொல்லப்போனால் 2017 ல் அரசியல் வாதிகளை அதிகம் பேச வைத்த படமாகிவிட்டது.
அறம்
லேடி டான் நயன்தாரா நடிப்பில் அறம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய படம். பொறுப்பற்ற அரசியல் வாதிகளையும், கவனக்குறைவான அரசு அதிகாரிகளுக்கு சவுக்கடி கொடுத்தது.
கதை ரீதியாக பாராட்டுகளை வாங்கினாலும் கதையை சொந்தம் கொண்டாடும் பிரச்சனை தான். அதே நேரத்தில் நயன்தாரா அரசியலுக்கு வருகிறாரா என பல கேள்விகளை அறம் எழுப்பியது.
தீரன் அதிகாரம் ஒன்று
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவான படம் தீரன் அதிகாரம் ஒன்று. இப்படத்தில் கார்த்தி, ரகுல் ஜோடியாக நடிக்க சதுரங்க வேட்டை வினோத் இயக்கியிருந்தார்.
சம்பவத்தில் சம்மந்தப்பட்ட போலிஸ் அதிகாரிகளே படத்தை பார்த்துவிட்டு வாழ்த்தினர். பின் படத்திற்கு நல்ல கூட்டம், மக்கள் வரவேற்பு என சில பாசிடிவ் விசயங்கள்.
இருந்தாலும் அதே போல ஒரு சம்பவம் தமிழகத்தில் மீண்டும் நடந்துள்ளது இன்றளவுல் பேசப்படுகிறது.
No comments:
Post a Comment