அஜித், விஜய் என இரு ரசிகர்களையும் மையமாக கொண்டு விசிறி என புதிய படம் உருவாகி வருகிறது. சரவணன் மீனாட்சி புகழ் செந்தில், சென்னை 28 புகழ் விஜய லட்சுமி நடித்த வெண்ணிலா வீடு படத்தை இயக்கிய வெற்றி மகாலிங்கம் தான் இப்படத்தையும் இயக்குகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர், ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் பற்றிய அடுத்த தகவல் வெளிவந்துள்ளது.
விசிறி படத்திற்கு திரைப்பட தணிக்கை குழுவான சென்சார் போர்டு U/A சான்றிதழ் கொடுத்துள்ளார்களாம். இதனால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

No comments:
Post a Comment