bidad

Tuesday, December 19, 2017

லைக்ஸ் களை அள்ளிவரும் விஜய்சேதுபதியின் புதிய பாடல் !


read‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’. ஆறுமுக குமார் என்பவர் இயக்கி வரும் இப்படத்தில் ஹீரோயினாக ‘மெகா பிரின்சஸ்’ நிகரிகா நடிக்கிறார். இதில் விஜய் சேதுபதி பழங்குடி இனத் தலைவராக வலம் வரவுள்ளாராம்.
மேலும், அவருக்கு எட்டு வித்தியாசமான கெட்டப்புகளும் உள்ளதாம். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வரும் இதற்கு ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்து வருகிறார், ஆர்.கோவிந்தராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
இயக்குநர் ஆறுமுக குமாருடன் இணைந்து ரமேஷ் காளிமுத்து - கணேஷ் காளிமுத்து இதனை தயாரித்து வருகின்றனர். படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.
ஏற்கெனவே, படத்தின் ஆடியோ ரைட்ஸை ‘திங்க் மியூசிக்’ நிறுவனம் வாங்கியது. சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது.

No comments:

Post a Comment

Featured Post

Free Videos

Online free videos Download and Watch

Make Your Website Here